ஈவெரா.,வின் இஸ்லாமிய வெறுப்பு: ஈவெரா.,வை உரித்து உண்மையை எடுத்து சொன்ன முஸ்லிம் இளைஞர்

84



நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் அபூபக்கர், அக்கட்சியின் வழக்கறிஞரான இவர், ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியின்போது, ஈ.வெ.ரா குறித்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. 'ஈ.வெ.ரா.,வின் இஸ்லாமிய வெறுப்பு' என்ற தலைப்பில் அபூபக்கர் பேசியதாவது:

1944, ஆக.,9ல் ஈ.வெ.ரா., ஜின்னாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் 'திராவிட நாடு, பாகிஸ்தான் நாடு என தனியாக பிரிப்பது தொடர்பாக தாங்கள் பேசுவதாக கூறினீர்கள்' என எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் எழுதிய ஜின்னா, 'திராவிட நாடு அமைக்க வேண்டுமெனில் உங்கள் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், நானல்ல. எனவே நான் அது பற்றி பேச முடியாது என்றும் இந்தியாவில் எந்த பகுதி மக்களாவது நியாயமான தனி நாடு கோரிக்கை முன்வைத்தால் என் ஆதரவு இருக்கும், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள பிராமணர் அல்லாத மக்கள் கோரினால் என் ஆதரவு இருக்கும்' என்றும் தெரிவித்திருந்தார்.

அதாவது, திராவிட நாடு கோரிக்கை நியாயமற்றது என்று கூறியுள்ளார். திராவிட நாடுக்காக இங்கு எந்தவொரு போராட்டமோ நடக்கவில்லை. கோரிக்கையோ மனுவோ கூட அளிக்கப்படாமல் இருக்கும் கும்பல் இந்த திராவிட கும்பல் தான்.

தமிழன் இழிநிலை



விடுதலை சிறுத்தை கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'தாய்மண்'-ல் ‛‛ஈவெரா மறுபரிசீலனை'' என்ற பெயரில் 2002ல் அக்கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளர் ரவிக்குமார் 9 கட்டுரைகளை எழுதியிருந்தார். அதில், தத்துவ ரீதியாக பல கேள்விகளை முன்வைத்திருந்தார். ஆனால் திராவிட கும்பல் அதற்கு பதில் சொல்லாமல், ரவிக்குமாரை முடக்கியதால், 9 கட்டுரையுடன் நின்றுபோனது.

இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் தமிழர் இல்லையா என்ற 3ம் கட்டுரையில், 'பிராமணர், முஸ்லிம், கிறிஸ்தவன் ஆகியோரும் தங்களை தமிழன் என சொல்வதால், தமிழன் இழிநிலை அடைந்திருக்கிறான்' என ஈ.வெ.ரா கூறியுள்ளார். அதாவது, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை தமிழர் அல்லாதவர்களாக விலக்கப்பட வேண்டியவர்கள் என ஈ.வெ.ரா கருதி வந்துள்ளார் என ரவிக்குமார் எழுதியுள்ளார். இதனை சீமான் சொல்லவில்லை, திமுக.,விடம் கட்சியை அடகுவைத்துள்ள விசிக.,வை சேர்ந்தவர் எழுதியுள்ளார்.

மனிதத் தன்மை



ஈ.வெ.ரா வக்கிரவாதி, மோசடிக்காரர், அயோக்கியர் என அத்தனைக்கும் தகுதியானவர்.

மார்ச் 6, 1962ல், ஈ.வெ.ரா.,வின் 'விடுதலை' பத்திரிகையின் தலையங்கம் பகுதியில், முஸ்லிம்களுக்கும், பிராமணர்களுக்கும் ஆட்சியாளர்கள் சலுகை கொடுத்ததால் நாடு வளர்ச்சியடையாமல் போய்விட்டது என்றும், இதனால் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மனிதத்தன்மை இல்லாதவர்களாக ஆகிவிட்டார்கள் என்றும் எழுதியுள்ளார்.

அதேபோல் இஸ்லாமிய பெண்களை கீழ்த்தரமாகவும் எழுதியுள்ளார். ஏப்.,23, 1964 அவர், 'பிராமணர், துலுக்கரால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து... அந்நிய சிறுபான்மையினர், நாட்டு பெரும்பான்மையின மக்களை விரட்டுவதா' என்ற தலைப்பில் ஈ.வெ.ரா எழுதியிருந்தார். அதில் 'பாகிஸ்தான், இலங்கை, பர்மாவில் உள்ள இந்தியர்களை மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற சொல்கிறார்கள். அப்படியிருக்கையில் இங்கே இருக்கும் துலுக்கர்களுக்கு என்ன வேலை, அவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் செல்ல வேண்டும். தமிழ்நாடு சரித்திரத்தில் நீ யார், நீ தமிழனா' என்றெல்லாம் எழுதியுள்ளார்.

முஸ்லிம் லீக்



இஸ்லாமியனான நான் இந்த மண்ணின் மைந்தன். உனக்கும் (ஈ.வெ.ரா.,) தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? நீ தமிழனா?. தமிழக இஸ்லாமியர்களின் எழுச்சி என்பது, திமுக.,விடம் அடிமைக் கட்சியாக இருக்கும் முஸ்லிம் லீக் கட்சியின் வீழ்ச்சியில் தான் இருக்கிறது. அந்த கட்சியையும் பாகிஸ்தானின் கட்சி, அதை தடை செய்ய வேண்டும் என ஈ.வெ.ரா கூறியுள்ளார்.

ஜாதி வெறியர்



செப்.,9, 1963ல் வந்த விடுதலை தலையங்கம், 'எனது பிறந்தநாள் செய்தி' என்ற தலைப்பில் வந்தது. பிராமணர், நம்மில் கீழான மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என நால்வரும் நமது சமுதாயத்தின் எதிரிகள் என ஈ.வெ.ரா குறிப்பிட்டுள்ளார். சமூக நீதி, சமத்துவ போராளி, சாதி ஒழிப்பை முன்னெடுத்தவர் என குறிப்பிடும் ஈவெரா, நம்மில் கீழானவர்கள் என எழுதுகிறார் எனில் அவருக்கு ஜாதிய பார்வை இருக்கிறதா? இல்லையா?, அவர் ஜாதிய வெறியரா? இல்லையா?. அதேபோல், நிதி என்ற பெயரில் பிச்சைப்போட்டது, மேடை போட்டது, கொடி பிடித்தது என அத்தனையும் செய்த இஸ்லாமியர்களையும் எதிரிகள் என்கிறார்.

முஸ்லீம் பெண்கள் பற்றி மோசமாக எழுதிய ஈவெரா





அது மட்டுமா, நுாற்றுக்கு 6 சதவீதம் உள்ள முஸ்லீம்கள் எந்த உடல் உழைப்பும் செய்யாமல், அவர்கள் வீட்டு பெண்கள் மனிதர்களின் கண்ணுக்கு தெரியக் கூடாது என்பதற்காகவும், பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோசா முறையில் உழைப்பு இல்லாமல் வாழும் முறையில் இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.

இந்த அளவுக்கு முஸ்லீம் பெண்களை யாரும் கேவலப்படுதியதில்லை. இவரைப் போய் தமிழர்களின் தந்தை என்று அடையாளம் காட்டினீர்களே. மன்னிக்கவே முடியாது.

அவர்கள் (முஸ்லீம்கள்) வீட்டில் நமது ஆண்களும் பெண்களும் வேலைக்காரர்களாக இருக்கிறார்களாம். அதாவது முஸ்லீம் பெண்கள் கோசா அணிந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் ஓசி சோறு தின்கிறார்கள் என்பது ஈவெராவின் குற்றச்சாட்டு.

இஸ்லாமிய பெண்களை இந்த அளவுக்கு மோசமாக பேசிய ஈவெரா தந்தை பெரியாரா?

இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு துரோகம் என்கிறார் ஈவெரா.

முஸ்லீம் லீக் ஒரு பாகிஸ்தான் கட்சி



இங்குள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தான் கட்சியான முஸ்லீம் லீக் பின்னால் நிற்கிறார்கள் என்று எழுதுகிறார் ஈவெரா. இங்குள்ள முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கட்சியா. சுதந்திரம் பெற்ற உடன் இந்த நாட்டில் உள்ள முஸ்லீம் லீக் அரசால் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கொள்கையற்ற கோமாளி



இப்படி ஈவெரா சொன்னவற்றை ஆதாரமாக நாங்கள் கொடுத்தால், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், பழனிபாபாவை எடுத்துக்கொண்டு சிலர் வருவார்கள். யார் ஈவெராவை, அம்பேத்கரை ஏற்றுக்கொள்ளவில்லையோ, அவர்களை நீங்கள் ஏற்காதீர்கள் என பழனிபாபா சொன்னதை எடுத்து வருவார்கள். அப்படியெனில், 'கருணாநிதி கொள்கையற்ற கோமாளி, தன் சுயத்தேவைக்காக யாருடனும் கூட்டணி வைப்பவர்' என பழனிபாபா சொன்னதையும் ஏற்றுக்கொள்வீர்களா?.

துலுக்கன் குல்லா போட்டுக்கொண்டு நீ வேறு, நான் வேறு என்கிறான். நமது பெண்கள் களை எடுப்பது, கல் சுமப்பது என்று இருக்கிறார்கள். அவர்கள் (முஸ்லீம்) பெண்களை மட்டும் புர்கா போட்டு வைத்துக்கொள்கிறார்கள். நம் பெண்கள் அவர்கள் வீட்டுக்குப் போய் வேலை செய்கிறார்கள். நம் நிலைமை இவ்வளவு கீழ் நிலைக்கு வந்துவிட்டது. இப்படி இருந்தால் எப்படி நீங்கள் முன்னுக்கு வரப்போகிறீர்களா என்று எழுதுகிறார் ஈவெரா.

இஸ்லாமியர்களை பற்றி ஈவெரா பேசிய தரவுகள் எல்லாம் பழனிபாபாவுக்கு கிடைத்திருந்தால் செருப்பால் அடித்திருப்பார். திராவிடர்களை பொறுத்தவரை வரலாற்று ரீதியாக பொய்களை முன்வைத்து செயல்படக்கூடியவர்கள். ஈவெரா.,வுக்கு இருந்த இஸ்லாமிய வெறுப்பு, கருணாநிதி, ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி வரை இருக்கிறது. மொத்தத்தில் திராவிடர்கள் ஒருநாளும் இஸ்லாமியர்களுக்கு உண்மையாக இருந்ததில்லை.

இவ்வாறு அபூபக்கர் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

கை தட்டிய சீமான்

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பல இடங்களில் அபூபக்கர் பேச்சை கை தட்டி வரவேற்றார்.

Advertisement