உன்னாவ் பாலியல் வழக்கு: பாஜ முன்னாள் எம்எல்ஏ.,வுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
புதுடில்லி:உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு தண்டனையை டில்லி உயர்நீதிமன்றம் நிறுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2017 ஆம் ஆண்டு வேலை கேட்டு வந்தபோதுபாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு முறை எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் சென்கார் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து வழக்கு டில்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் பாஜ.,விலிருந்துநீக்கப்பட்ட எம்.எல்.ஏ., குல்தீப் சென்காருக்கு 2019 டிசம்பரில் இவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்தும் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சிறையில் மரணமடைந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்குகளில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணையில் இன்று டில்லி நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை குல்தீப் சென்காருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்படுகிறது.மேலும்பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயாரை மிரட்டக்கூடாது, வாரம் ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.15 லட்சம் தனிநபர் பிணை மற்றும் அதே தொகைக்கு ஈடாக மூன்று நபர் ஜாமீன் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிலிருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் செல்லக்கூடாது.பாதிக்கப்பட்ட பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ எவ்வகையிலும் அச்சுறுத்தக்கூடாது.
தற்போது டில்லியிலேயே தங்கியிருக்க வேண்டும் மற்றும் வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.இவ்வாறு நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆந்திராவில் அதிகரிக்கும் 'சுன்னத்' சிகிச்சை; மத நோக்கம் இருப்பதாக ஓய்வு அதிகாரி 'பகீர்'
-
போட்டி தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்தது என்.டி.ஏ.,
-
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
-
பலாத்கார வழக்கு: மாஜி எம்.எல்.ஏ., ஆயுள் தண்டனை நிறுத்தம்
-
மஹாராஷ்டிரா டி.ஜி.பி., ஆகிறார் என்.ஐ.ஏ., தலைவர் சதானந்த்
-
இரு குழந்தைகளை கொன்று தந்தை, பாட்டி தற்கொலை; பிரிய மனமில்லாமல் நடந்த சோகம்