தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

தர்மபுரி: தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்-துமஸ் விழா நேற்று நடந்தது.


செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் தன-சேகர் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து, விழாவின் முக்கியத்துவத்தை பற்றியும், நல்லொழுக்கங்களின் மாண்பினை மாணவர்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தினர்.

நிர்வாக அலுவலர் ரபிக்அகமத், முதல்வர் வள்ளியம்மாள், நிர்-வாக முதல்வர் ஓங்காளி, மழலையர் மற்றும் தொடக்க நிலைப்பி-ரிவு முதல்வர் மலர்விழி, பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து, மழலையர் பிரிவு மாணவ, மாணவியரின் கிறிஸ்துமஸ் தொடர்பான பல்வேறு வண்ண கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடந்தன. இதில், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement