மின்கம்பி உரசி தீப்பற்றியதில் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்
அரூர்: அரூர் அருகே, மின்கம்பி உரசியதில் அறுவடைக்கு தயாராக இருந்த, 7 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசமானது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பேதாதம்பட்டியை சேர்ந்-தவர் விவசாயி பிரபு, 47; இவரது விவசாய நிலத்தில், 7 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று மதியம், 3:00 மணிக்கு தோட்டத்துக்கு மேல் சென்ற மின் கம்பியில் கரும்பு சோகை உரசி தீப்பிடித்தது. காற்றில் மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. சம்-பவ இடத்திற்கு வந்த அரூர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலு-வலர் ஏழுமலை தலைமையிலான வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கரும்புகள் முற்றிலும் எரிந்து நாச-மானது. கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement