லண்டன் டூ ஹைதராபாத் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நமது நிருபர்




லண்டனில் இருந்து ஹைதராபாத் வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டடது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் விமானம் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். சந்தேகப்படும் வகையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பின்னர் விமானம் மீண்டும் லண்டனின் ஹீத்ரோவுக்கு புறப்பட்டு விட்டது. இந்தியாவுக்கு வந்த லண்டன் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertisement