புயல், வெள்ளத்தால் இலங்கை பாதிப்பு; 450 மில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி
கொழும்பு: புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
அண்மையில் டிட்வா புயல் காரணமாக இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா மீட்பு படையினர் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி இந்தியா உதவி செய்து இருந்தது. இந்நிலையில், பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் இலங்கை வெ ளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்துடன் பேச்சு நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடனும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். பின்னர் ஜெய்சங்கர் கூறியதாவது: புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கும். இதில் 350 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) சலுகையுடன் கடன் மற்றும் 100 மில்லியன் டாலர் மானியம் அடங்கும்.
இந்த நிதி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளுக்கும், சாலை, ரயில் மற்றும் சேதம் அடைந்த பாலங்களை சரி செய்ய பயன்படுத்தப்படும். 2022ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில், இந்த இயற்கை பேரிடர் புதிய சிரமங்களை உருவாக்கியுள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டு வருபவதற்கு இலங்கையுடன் இணைந்து செயல்படுமாறு பிரதமர் மோடி எங்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
வாசகர் கருத்து (8)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
23 டிச,2025 - 21:59 Report Abuse
மனித நேயம் யார் கஷ்டப்பட்டாலும் துன்பத்தில் இருந்தாலும் இந்தியா மோடி அவர்கள் முன்னின்று உதவி செய்வார் அதை யாரும் குறை சொல்லலாகாது அது கையாலாகாத கபடத்தனம் உதவி செய்ததை போற்றாவிட்டாவும் தூற்றாமல் இருப்பதே மேல் நண்பன்டா 0
0
Reply
Venugopal S - ,
23 டிச,2025 - 18:21 Report Abuse
அண்டை நாடுகளுக்கு வாரி வழங்குவார்கள் ஆனால் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் கொடுக்க மாட்டார்கள்! 0
0
Reply
Suresh - Delhi,இந்தியா
23 டிச,2025 - 18:11 Report Abuse
வெளியுறவுக் கொள்கையில் சீனாவைப் போல ஏன் இருப்பதில்லை ?. 0
0
Reply
Suresh - Delhi,இந்தியா
23 டிச,2025 - 18:10 Report Abuse
கணிகைக்கு தரும் பணம் போல, ஆற்றிலே கரைத்த பெருங்காயம் போல 0
0
Reply
Mohan - COIMBATORE,இந்தியா
23 டிச,2025 - 16:42 Report Abuse
இலங்கை நம்ப தகுந்த நாடு கிடையாது ..வாங்கி திங்கற வரைக்கும் தான் ...தொண்டக்கி கீழ போறதுக்குள்ள சீனாகிட்ட போயிருவேன் ..எவ்ளோ தடவைதான் நாம அவமானப்பட்டு செருப்படி வாங்குறது தெரியல ... கேட்டா ராஜதந்திரம்னு சொல்லுவானுக ... .. எவனும் உண்மையில்லை ...புருஞ்சு மத்திய அரசாங்கம் சொந்தமக்களுக்கு செலவிடனும் ... 0
0
Reply
அப்பாவி - ,
23 டிச,2025 - 15:33 Report Abuse
நேத்திக்கி ஒர் இலங்கை அமைச்சர் இந்தியாவைப் புகழ்ந்தாரே இதுக்குத்தானா? 0
0
vivek - ,
23 டிச,2025 - 17:41Report Abuse
அரைவேக்காடு அப்பாவி...உன்னை போல வெறும் இருநூறு முட்டு கொடுக்கவில்லை 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
23 டிச,2025 - 14:11 Report Abuse
இருந்தாலும் அவனை கண்காணிக்கணும். இந்த பக்கம் இந்தியாவிடம் உதவியை பெற்றுக்கொண்டு அந்த பக்கம் சீனாவுக்கும் வழிவிடுவான் சிங்களன். ஆட்டம் அதிகமாச்சுன்னா சீனாவின் வழியை பின்பற்றனும்.. கொடுத்த கடனை வட்டியுடன் விரைவாக செலுத்த அழுத்தம் கொடுத்தா வழிக்குவருவான். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement