வாகனம் மோதி கார்ப்பென்டர் பலி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், முக்கல்நாய்க்கன்பட்டியை சேர்ந்த கார்ப்-பென்டர் சிவகுமார், 43. இவர் கடந்த, 21, அன்று சிவகுமார் பெங்களூருவில் உள்ள அவருடைய அண்ணன் சக்திவேலை பார்ப்பதற்காக அவருடைய டி.வி.எஸ்., ஸ்போர்ட் பைக்கில் சென்று விட்டு,


மீண்டும் இரவு, 11:00 மணிக்கு பெங்களூரு - -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், குண்ட-லாம்பட்டி அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிவகுமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement