எண்கள்
15,00,000
க டந்த நிதியாண்டுக்கான வருமான கணக்கு தாக்கல் செய்தவர்களில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் படிவத்தில் மாற்றங்களை செய்து மீண்டும் தாக்கல் செய்ததாக, மத்திய நேரடி வரிகள் வாரியமான சி.பி.டி.டி., தெரிவித்துள்ளது.
அறக்கட்டளைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடையை தவறான வகையில், வருமான வரி கழிவாக காட்டியதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.
அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் வருமான வரிக்கணக்கை திருத்தி தாக்கல் செய்துள்ளனர்.
31
தொ ழில்களில் துணிகர முதலீடு மற்றும் தனிப்பட்ட முதலீடு, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், சென்ற நவம்பர் வரை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி ஆலோசனை நிறுவனமான யர்ன்ஸ்ட் அண்டு யங் மற்றும் ஐ.வி.சி.ஏ., குழும அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வென்ச்சர் கேபிடல் எனப்படும் துணிகர முதலீடு, கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்தாண்டு நவம்பர் வரை, 11 மாதங்களில் அது, 4.43 லட்சம் கோடியானது.
அதாவது, கடந்த ஆண்டு முழுதும் திரண்ட முதலீட்டில் 88 சதவீதத்தை நவம்பரில் எட்டியது. நவம்பரில் மட்டும் முதலீடு 31 சதவீதம் அதிகரித்தது.
மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது