ரூ.4,318 கோடிக்கு ஏலம் போனது பாக். அரசு விமான நிறுவனம்

இஸ்லாமாபாத் :கடும் ந ஷ் டத்தில் இயங்கி வந்த பாகிஸ்தான் அரசு விமான நிறுவனமான பி.ஐ.ஏ.,வை விற்பனை செய்ய நடந்த ஏலத்தில், ஆரிப் ஹபீப் என்ற முதலீட்டாளர், இந்திய மதிப்பில் 4,318 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.

இதற்கான ஏலத்தில், லக்கி சிமென்ட், தனியார் விமான நிறுவனமான ஏர் ப்ளூ மற்றும் ஆரிப் ஹபீப்பின் முதலீட்டு நிறுவனம் ஆகியவை பங்கேற்றன.

முத்தரப்பில் நடந்த கடும் போட்டியால், மூன்று சுற்றுகளாக நடந்த ஏலத்தின் இறுதியில் ஆரிப் ஹபீப், பாகிஸ்தான் மதிப்பில், 13,500 கோடி ரூபாய்க்கு வென்றார்.

இந்த ஏலம் முழுவதும் டிவியில் நேரலை செய்யப்பட்டது. அரசு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கான பிரதமரின் ஆலோசகர் முகமது அலி, ஏலத்தின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Advertisement