அலுமினியம் தயாரிப்பில் தரம் பின்பற்றுவது பற்றி கருத்தரங்கு
கோவை: இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்.,) கோவை சார்பில், அலுமினியம் மற்றும் அலுமினியம் அலாய் தயாரிப்புகளில் கடைப்பிடிக்க வேண்டிய தரக்கட்டுப்பாடுகள் குறித்த கருத்தரங்கம், கோவையில் நடந்தது.
சுங்கம், இந்திய வார்ப்பட தொழில் கழக அரங்கில் நடந்த கருத்தரங்கில், வார்ப்பட செயல்முறைகள், அலுமினிய தயாரிப்புகளில் மேற்கொள்ள வேண்டிய தர முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பி.ஐ.எஸ்., கோவை அலுவலக விஞ்ஞானி ரமேஷ், உதவி பிரிவு அலுவலர் பிரசன்னா குமார், ஆகியோர் தர நிர்ணய அமைவனம் குறித்து விரிவாக விளக்கினர்.
விஞ்ஞானிகள், வினித் குமார், சுரேஷ்குமார் கோபாலன், ரகு ஜோஸ்னா பிரியா ஆகியோர், ஐ.எஸ்., 617:2024 தர விதி மற்றும் பரிசோதனை முறைகள், பி.ஐ.எஸ்., உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள், இணையதள சேவைகள் குறித்து விளக்கினர்.
வார்ப்பட தொழில் சங்க பிரதிநிதிகள், இன்ஜினியர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.