சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் கைது
கரூர்: கரூரில், சாலை மறியலில் ஈடுபட்ட, சி.ஐ.டி.யு., அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், 8 மணி நேர வேலை உரிமையை பறிக்க கூடாது. நிரந்த பணிகளில் கான்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும். கட்டுமான, முறைசாரா தொழிலாளர் நலவாரியங்களை, கார்ப்பரேட் மயமாக்கும் முறையை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கரூர் மனோகரா கார்னரில், மாநில சி.ஐ.டி.யு., செயலாளர் கோபி குமார் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் ஜீவானந்தம், ராஜா முகமது, சுப்பிரமணியன், சாந்தி, மாவட்ட மா.கம்யூ., கட்சி செயலாளர் ஜோதிபாசு, நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட பலரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது