புவியியல் தகவல் அடிப்படையில் நிலஅளவீடு

கோவை டிச. 23-: கோவையில் நில அளவைத்துறை சார்பில் டிரோன் மூலமாக நில அளவை செய்து, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புலவரைபடங்களை உருவாக்கி, அவற்றை சொத்து வரிக்கான தரவுகளுடன் இணைக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தில் பணியாற்றும் நிலஅளவைத்துறை அலுவலர்களுக்கு சர்வே ஆப் இந்தியா மற்றும் மத்தியப்பிரேதச மாநில மின்னணுவில் துறை வல்லுநர்களால் மூன்று நாள் பயிற்சி துவங்கியது.

குமரகுரு கல்லுாரியில் நடந்த இப்பயிற்சியில், கோவை மண்டல நில அளவைப் பதிவேடுகள் துறை துணை இயக்குநர் மோகன், மாவட்ட உதவி இயக்குனர் சரவணன்,சர்வே ஆப் இந்தியா நில அளவையர் அத்ரேயா, மின்னணுவியல் நிபுணர் ராம் கிருஷ்ண திவாரி, மத்திய நிலஅளவை அலுவலக தொழில்நுட்ப மேலாளர் ஜெயந்தி, காயத்ரி உள்ளிட்டோர்பங்கேற்றனர். 85 பேருக்கு செயல்முறைதொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. கோவை உதவி இயக்குநர் சரவணன், நிலம் அளவீடு செய்யும் முறை, டிரேன் பயன்படுத்துவது, மேப்பிங் செய்வது களத்தில் பணியாற்றும் தன்மை குறித்து விளக்கம் அளித்தார்.

Advertisement