கதர் கிராம பொருட்கள் விற்பனை : தலைமை அதிகாரி ஆலோசனை
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கதர் கிராம பொருட்களின் விற்பனை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கதர் கிராம பொருட்களை விற்பனை செய்வது. விற்பனையை அதிகரிப்பது தொடர்பாகவும் அனைத்து துறை அலுவலர்களோடு ஆலோசனை செய்யப்பட்டது.
அனைவரும் கதிர் கிராம பொருட்களை வாங்கி பயனடைய வேண்டும். அதிகளவில் விநியோக ஆணை வழங்கி விற்பனையை அதிகரிக்க வேண்டும். வாரியத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பை அலுவலர்கள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குநர் அன்பழகன் உட்பட ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், வருவாய் துறை, கதர் கிராமம் தொழில் வாரியம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர் .
தொடர்ந்து கோலியனுார் ஒன்றியம், பிடாகம் ஊராட்சியில் உள்ள கைமுறை காகித அலகு மற்றும் விழுப்புரம் காதி கிராப்ட் ஆகிய இடங்களை தலைமை செயல் அலுவலர் ஆய்வு செய்தார்.