ஆதிங்கப்பட்டு அரசு பள்ளியில் மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி
பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம் துவங்கியது.
பள்ளி கல்வி துறை சமக்ர சிக் ஷா சார்பில், ராணி லக் ஷ்மி பாய் ஆத்ம ரக் ஷ பிரஷிக்சம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், மூன்று மாத கால தற்காப்பு பயிற்சி நேற்று துவங்கியது.
நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் நான்சி ஏஞ்சலின் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் ரகுநாதன் வரவேற்றார். பொறுப்பாசிரியர் செல்வி வெஜினியா சிறப்புரையாற்றினார். புதுச்சேரி கராத்தே சங்க பொதுச் செயலாளர் கராத்தே வளவன், இணை செயலாளர் ஷீகான் பாலச்சந்தர், பாகூர் கொம்யூன் மூத்த பயிற்சியாளர் ஸ்ரீஜா ஆகியோர் ஜூடோ, கராத்தே தற்காப்பு கலை குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்து முகாமை துவக்கி வைத்தனர். ஆசிரியர் யோகானந்தம் நன்றி கூறினார்.
மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது