கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு ஆலோசனை

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக சமுதாயக்கூடத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா தலைமை வகித்தார்.

கலெக்டர் பி.ஏ.,(பொது) விஜயகுமார், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர்கள் (அமலாக்கம்) சதீஷ், (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவசிந்து முன்னிலை வகித்தனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை, ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் சக்திவேல், தமிழ்நாடு மேய்ச்சல் சமூக மக்கள் சங்க தலைவர் ராஜிவ் காந்தி, வழக்கறிஞர் சேவுக ராஜ், ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவன இயக்குனர் ஜீவானந்தம், முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் ஆதிமூலம் உட்பட ஆடு மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுவோர் பங்கேற்றனர்.

Advertisement