இளையான்குடியில் புதிய குடிநீர் திட்டம் விரைவுபடுத்த கவுன்சிலர் கோரிக்கை
இளையான்குடி: இளையான்குடியில் புதிய குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டுமென பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜுமுதீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அன்னலட்சுமி வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
அ.தி.மு.க., கவுன்சிலர் நாகூர் மீரா: இளையான்குடி பேரூராட்சி பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ. 30 கோடி செலவில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் திட்டத்திற்காக வைகை ஆற்றுக்குள் உறை கிணறு தோண்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதை நிறைவேற்ற பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயேச்சை கவுன்சிலர் ராஜவேலு: இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படாத திட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை ரத்து செய்துவிட்டு தேவைப்படும் திட்டங்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல் அலுவலர் அன்னலட்சுமி: கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது