முதுநிலை படிப்புகளுக்கு 'கியூட்' தேர்வு; ஜன.14 வரை விண்ணப்பிக்கலாம்
சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலையில் 23 முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர ஜன., 14 வரை விண்ணப்பிக்கலாம்.
காந்திகிராமம் பல்கலையின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 2024 முதல் கியூட் பொது நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கிறது. இந்தாண்டு 23 முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர கியூட் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பான பல்கலை அறிக்கையில்,'23 முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். சம்பந்தப்பட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://cuet.nta.nic.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். படிப்பு ஒவ்வொன்றிலும் சேருவதற்கான அடிப்படைத்தகுதிகள், குறிப்பேடு, மாணவர்கள் தங்கள் தேர்வு செய்யும் துறைக்கு எந்தெந்த தாள்கள் (test paper) எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களை www.ruraluniv.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் இருந்து பெறலாம். ஜன.,14 வரை விண்ணப்பிக்கலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.-
மேலும்
-
மக்களை பலி வாங்கும் திமுக அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது; அண்ணாமலை காட்டம்
-
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயம்; மத்திய அரசு ஒப்புதல்
-
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.289 கோடிபேரிடர் நிவாரணத் தொகை ஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல்
-
சச்சின் போல வைபவ் சூர்யவன்ஷி சாதனை: சசிதரூர் பாராட்டு
-
மும்பை வளர்ச்சிக்கு உதவாத தாக்கரேக்கள் கூட்டணி:ஏக்நாத் ஷிண்டே விமர்சனம்
-
விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது