ரூ.1.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்; நைஜீரியா பெண் உட்பட 3 பேர் கைது
பெங்களூரு: பெங்களூரில் இரு வழக்குகளில், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நைஜீரியா பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு வர்த்துாரில், வாடகை வீட்டில் வசிக்கும் நைஜீரியா பெண் ஒருவர், போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக, சி.சி.பி., போதை பொருள் தடுப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது. அந்த பெண்ணின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
மும்பையில் இருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம் ஆம்னி பஸ்சில் வந்தார். அவரை பஸ் நிலையத்தில் கைது செய்த போலீசார், அவரது உடமைகளை சோதனை செய்தனர். 'பிரட்' பாக்கெட்டிற்குள், பிரட்டுகளுக்கு நடுவில் மறைத்து, 121 கிராம் எடையுள்ள 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் கடத்தியது தெரிய வந்தது. உடன் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவரது பெயர் ஒலஜிட் எஸ்தர், 34 என்பதும், கடந்த ஆண்டு கல்வி விசாவில் இந்தியா வந்தவர், மும்பையில் தங்கி இருந்தார். கல்லுாரியில் சேராமல், மும்பையில் வசிக்கும் தன் நைஜீரிய ஆண் நண்பர் கூறியபடி, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார். பின், பெங்களூரு வந்த அவர், வர்த்துாரில் தங்கி இருந்து போதை விற்பனையில் ஈடுபட்டதும், புத்தாண்டு அன்று விற்க மும்பையில் இருந்து கோகைன் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுபோல, ஜாலஹள்ளி காலிங்கராவ் சதுக்கம் பகுதியில் உயர் ரக கஞ்சா விற்பனை செய்த கேரளாவின் நிஜில் ராஜ், 27, மெல்வின், 30 ஆகியோரை, ஜாலஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 247 கிராம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இரு வழக்கிலும் சேர்த்து, 1.46 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன், உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
புன்னம் சத்திரம் 3 சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
-
மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
-
ரூ.1.35 கோடிக்கு தேங்காய், கொப்பரை, எள் வர்த்தகம்
-
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 4ம் நாள் பகல் பத்து உற்சவம்
-
சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் கைது
-
சாலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி குளத்துப்பட்டி மக்கள் மனு