சாலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி குளத்துப்பட்டி மக்கள் மனு

கரூர்: சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, களத்துப்பட்டி கிராம மக்கள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கடவூர் குருணிகுளத்துப்பட்டி அருகேயுள்ள களத்துப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கிருந்து, குருணிகுளத்துப்பட்டி செல்ல, 1.6 கி.மீ., துாரம் சாலை உள்ளது. இதில், பஞ்., நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சாலைக்கு இடையில், 20 சென்ட் நிலம் என்னுடையது என தனிநபர் ஒருவர் கூறியது மட்டுமின்றி, அந்த இடத்தில் கம்பி வேலி அமைத்துள்ளார்.

இது குறித்து, ஏப்., மாதத்தில் மனு அளித்து இருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்த போது, வருவாய்துறை, போலீசார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பு அகற்றுவதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர், குளம் வழியாக தற்காலிக பாதை அமைத்து கொடுத்தனர். சிறிய அளவில் மழை பெய்தாலும் கூட, அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை. இதனால், 6 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டி உள்ளது. எனவே, சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement