மதம் சார்ந்த கட்டடங்களுக்கு திட்ட அனுமதியில் சலுகை

சென்னை: சென்னை பெரம்பூரில் நடந்த, கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

சிறுபான்மையின கல்லுாரி மாணவர் நலன் கருதி, சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில், 130 மாணவர்கள் பயனடையும் அளவிற்கு, புதிய விடுதிகளை துவக்கி உள்ளோம்.

சிறுபான்மையினரால் நடத்தப்படும் 456 கல்வி நிறுவனங்களுக்கு, நிரந்தர அந்தஸ்து சான்றிதழ் வழங்கி இருக்கிறோம்.

கிறிஸ்துவ மக்கள், ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கான மானியத்தை, 37,000 ரூபாயாக உயர்த்தி உள்ளோம்.

த மிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிமுறைகளின்படி, கடந்த 2019 முதல் 2024ம் ஆண்டு வரை செயல்பட்டு கொண்டிருக்கும் மதம்சார்ந்த கட்டடங்களுக்கு, மாவட்ட கலெக்டர்களிடம் தடையின்மை சான்று கேட்காமல், திட்ட அனுமதி வழங்கப்படும்.

இந்த காலகட்டத்தில், திட்ட அனுமதிக்கு விண்ணப்பித்திருக்கும் மதம் சார்ந்த கட்டடங்களுக்கும் இது பொருந்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement