வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு; நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த முடிவு
சென்னை: வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக, நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக, நவம்பர் 4 முதல் வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. கணக்கெடுப்பு பணிக்கு முன் தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில், 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் இருந்து, 97.3 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், நீக்கம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனு அளிக்க, 2026 ஜனவரி 18ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
இதற்காக, வரும் 27 மற்றும் 28ம் தேதிகளிலும், ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அப்போது, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை, வாக்காளர்கள் வழங்கலாம்.
இந்த அறிவிப்பை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
@block_B@ முறையாக நடக்குமா? தமிழகத்தில், வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடக்கவில்லை. பல இடங்களில் வாக்காளர்களின் படிவங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் பூத் ஏஜன்டுகள் பூர்த்தி செய்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். முறையாக இப்பணிகள் நடந்திருந்தால், ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கும். இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் தற்போதும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், தேர்தல் கமிஷன் மவுனமாக உள்ளது. இந்நிலையில், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான முகாம், நான்கு நாட்கள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கு, தி.மு.க. கூட்டணி தரப்பில் தீவிரம் காட்டப்படுகிறது. அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளும் தங்களது ஆதரவாளர்களை சேர்க்க ஆர்வமாக உள்ளன. இதனால், நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். தகுதியான வாக்காளர்கள் மட்டும் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் தாலைமை தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர்., பணிகள் கேள்விக்குறியாகும் வாய்ப்புள்ளது.block_B
மேலும்
-
புன்னம் சத்திரம் 3 சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
-
மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
-
ரூ.1.35 கோடிக்கு தேங்காய், கொப்பரை, எள் வர்த்தகம்
-
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 4ம் நாள் பகல் பத்து உற்சவம்
-
சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் கைது
-
சாலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி குளத்துப்பட்டி மக்கள் மனு