மூத்த குடிமக்களிடம் கையொப்பம் பெற்று ரேஷன் வழங்க முடிவு
சென்னை: 'மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும்போது, கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைகளில் வழங்க இயலாத நிலையில், பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பொருட்களை வழங்க வேண்டும்' என, ரேஷன் ஊழியர்களுக்கு, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், மாதந் தோறும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே, உணவு பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டத்தை, அரசு துவக்கியுள்ளது.
அதன்படி, கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று, கார்டுதாரரின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்குகின்றனர். தொலைதொடர்பு சிக்னல் பிரச்னையால், கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு செய்ய முடிவதில்லை. இதனால், பொருட்கள் வழங்கப்படாமல், கார்டுதாரர்களை அலைக்கழிப்பு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, 'வீடு தேடி பொருட்கள் வினியோகம் செய்யும்போது, கைரேகை சரிபார்ப்பு முறை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத நிலையில், பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பொருட்களை வழங்க வேண்டும்' என, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, தமிழக உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
புன்னம் சத்திரம் 3 சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
-
மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
-
ரூ.1.35 கோடிக்கு தேங்காய், கொப்பரை, எள் வர்த்தகம்
-
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 4ம் நாள் பகல் பத்து உற்சவம்
-
சாலை மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் கைது
-
சாலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி குளத்துப்பட்டி மக்கள் மனு