நுாலக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

குளித்தலை: குளித்தலை அடுத்த நெய்தலுார் காலனியில் உள்ள, ஊர்ப்புற நுாலக உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டு பெஞ்சமின் தலைமை வகித்தார். நெய்தலூர் காலனி நுாலகர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெரால்டு பெஞ்-சமின் அனைத்து மாணவ, மாணவியருக்கும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.


அப்போது, நுாலகங்களின் வளர்ச்சிக்காக பல்-வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் முன்னெ-டுத்து வருகிறார். ஏழை, எளிய மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் கட்டணங்களை செலுத்தி அவர்களையும், உறுப்பினர்களாக இணைப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.
வாசிப்பு பழக்கத்தினை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களை நல்வழி படுத்துதலுக்கும் நுாலகங்-களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சரவணன், மேகலா, சிவானந்தம், தனபால் உள்பட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Advertisement