சந்தை துளிகள்

குஜராத் கிட்னி நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியல்

'கு ஜராத் கிட்னி அண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி' நிறுவன பங்குகள் நேற்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஒரு பங்கின் விலை 114 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கிட்டதட்ட 6 சதவீத லாபத்துடன் வர்த்தகத்தைத் துவங்கியது. பின்னர் 123.25 ரூபாய் வரை உயர்ந்தது. வர்த்தக நிறைவில் 9 சதவீதத்துக்கும் மேல் சரிந்து முடிந்தது.

நிதி அதிகாரி ராஜினாமா எட்டர்னல் பங்குகள் சரிவு


சொ மாட்டோ நிறுவனத்தின் குயிக்-காமர்ஸ் பிரிவான 'பிளிங்கிட்' நிறுவனத்தின் நிதி அதி காரி விபின் கபூரியா ராஜினாமா செய்துள்ளார் . இந்த செய்தி வெளியான நிலையில், சொமாட்டோவின் தாய் நிறுவனமான 'எட்டர்னல்' பங்குகள் 2.50 சதவீதம் வரை சரிந்து, கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது.

ஐ.பி.ஓ., வருகிறது ஹொரைசன் இண்டஸ்ட்ரியல்


'பி ளாக்ஸ்டோன் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய கிடங்கு மற்றும் தளவாட மேம்பாட்டு நிறுவனமான 'ஹொரைசன் இண்டஸ்ட்ரியல் பார்க்ஸ்' பங்குச் சந்தையில் நுழையத் தயாராகிறது. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,600 கோடி ரூபாய் நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது. ஐ.பி.ஓ.,வுக்கு முன்னதாகவே எஸ்.பி.ஐ., லைப், ராதாகிஷன் தமானி போன்ற பெரிய முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 200 மில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது.

Advertisement