மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, வடக்கிபாளையத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில், பலர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கால்நடைகளுக்கு வாய் சப்பை எனப்படும் கோமாரி நோய் தாக்குதலை தவிர்க்கும் விதமாக, கோமாரி நோய் தடுப்பூசி போட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுக்க தடுப்பூசி போட, உதவி இயக்குனர் சக்ளா பாபு தலைமையில் முகாம் நடந்தது.
இதில், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்ட குழு தலைவர் பரமசிவம், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் நாகராஜ் மற்றும் டாக்டர்கள், உதவியாளர்கள் என கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் வாயிலாக பொள்ளாச்சி கோட்டத்தில், 85 ஆயிரத்து, 523 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் ஜன., 28ம் தேதி வரை நடக்கிறது' என்றனர்.
மேலும்
-
புடின் இல்லத்தை ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்கியதற்கு இதோ ஆதாரம்; வீடியோவை வெளியிட்டது ரஷ்யா
-
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
-
ராமர் கோவில் இயக்கம் உலகின் மிக பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று; அமைச்சர் ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி
-
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் தலைநகரம்; சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் மூடல்
-
உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு
-
ராஜஸ்தானில் பயங்கர சதி முறியடிப்பு; காரில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்