புடின் இல்லத்தை ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்கியதற்கு இதோ ஆதாரம்; வீடியோவை வெளியிட்டது ரஷ்யா
மாஸ்கோ: அதிபர் புடின் இல்லம் மீது உக்ரைன் ட்ரோன்கள் கொண்டு தாக்கிய வீடியோ காட்சிகளை ரஷ்யா வெளியிட்டு உள்ளது.
ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் ரஷ்ய அதிபர் புடினின் இல்லம் உள்ளது. இந்த வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார்.
நீண்ட தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் 91 ட்ரோன்கள் மூலம் புடினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியதாகவும், இந்நடவடிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்றும் கூறி இருந்தார். ஆனால் ரஷ்ய ராணுவத்தின் இந்த தகவலை உக்ரைன் மறுத்து தாக்குதல் நடத்தப்பட வில்லை என விளக்கம் அளித்தார்.
இந் நிலையில், அதிபர் புடின் மாளிகை மீது உக்ரைன் ட்ரோன் கொண்டு தாக்கிய விடியோ காட்சிகளை ரஷ்யா வெளியிட்டு உள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த விடியோவை வெளியிட்டு இருக்கிறது. குறி வைக்கப்பட்டு, மிக கவனமாக திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளது.
மேலும்
-
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு
-
ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி
-
ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே கோரிக்கை மனு முடித்து வைப்பு
-
'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய்
-
மாநகராட்சி மைதானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கபடி விளையாட்டு அரங்கு
-
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை