ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் தவிப்பு
வால்பாறை: நகரில் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால், மக்கள் நாள் தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. நகரில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ளன. நகரின் மத்தியில் பொள்ளாச்சி - வால்பாறை ரோடு அமைந்துள்ளது.
ஒரு வழிப்பாதையாக இருப்பதால், இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை இந்த ரோட்டில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுற்றுலாபயணியரின் வாகனங்களும் அதிக அளவில் இந்த ரோட்டில் தான் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் வால்பாறை நகரின் பிரதான ரோட்டின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்து அதிக அளவில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் நடந்து செல்ல வழியில்லாமல் நாள் தோறும் தவிக்கின்றனர்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்ற வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
புடின் இல்லத்தை ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்கியதற்கு இதோ ஆதாரம்; வீடியோவை வெளியிட்டது ரஷ்யா
-
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
-
ராமர் கோவில் இயக்கம் உலகின் மிக பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று; அமைச்சர் ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி
-
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் தலைநகரம்; சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் மூடல்
-
உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு
-
ராஜஸ்தானில் பயங்கர சதி முறியடிப்பு; காரில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்