மாசுபட்ட நீரைக் குடித்த 7 பேர் பலி; இந்தூரில் சோகம்!

4

போபால்: இந்தூரில் மாசுபட்ட நீரைக் குடித்த 7 பேர் பலி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர்.


மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் உள்ளது. இங்கு வசித்து வரும் மக்கள் கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். துர்நாற்றம் வீசும் மற்றும் அழுக்கு நீரைக் குடித்தது தான் காரணம் என்பது தெரியவந்தது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், 3 நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஒரு மண்டல அதிகாரி மற்றும் ஒரு உதவி பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2,00,000 இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மோகன் யாதவ் அறிவித்தார்.



மாசுபட்ட நீர் விநியோகம் குறித்து பல நாட்களாக புகார் அளித்தும், சரியான நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர். இந்தப் பிரச்னை கிட்டத்தட்ட 6 மாதங்களாக நீடித்து வருவதாகவும், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும் உள்ளூர் மக்கள் மாவட்ட நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement