'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய்
கோவை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மல்லிகை ஒரு கிலோ 2000 ரூபாய்க்கும், முல்லை 1200 ரூபாய்க்கும் விற்பனையானது.
கோவை சந்தைக்கு, ஆலாந்துறை, தொண்டாமுத்துார், சத்தியமங்கலம், காரமடை, புளியம்பட்டி, சேலம், நிலக்கோட்டை, ராமநாதபுரம், பெங்களூர், மைசூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் சராசரியாக 10 டன் பூக்கள் வரத்து இருக்கும்.
நேற்று மல்லிகை, முல்லை போன்ற பூக்கள் வரத்து பனிப்பொழிவு காரணமாக குறைந்தாலும், செவ்வந்தி போன்ற பூக்கள் வரத்து அதிகம் என்பதால், 20 டன் அளவுக்கு வரத்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை சந்தையில் நேற்று மல்லிகை கிலோ 2000 ரூபாய், முல்லை 1200 ரூபாய், ஜாதிமல்லி 1200 ரூபாய், சாமந்தி ரகத்தை பொறுத்து 20 முதல் 120 ரூபாய் வரையும் , செவ்வந்தி 200 ரூபாய்க்கும், துளசி 60 ரூபாய்க்கும், செண்டு மல்லி 60 ரூபாய்க்கும், ரோஸ் ஒரு கட்டு 50 முதல் 200 ரூபாய்க்கும் விற்பனையானது.
மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் ஐயப்பன் கூறுகையில், '' புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது. பனியால் வரத்தும் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.
கார்த்திகை பிறந்ததில் இருந்தே பூ வியாபாரம் நன்கு உள்ளது.
தை மாதத்தில் பனி தொடர்ந்தால் பொங்கலுக்கு மல்லிகை விலை, 3000 வரை கூட போகலாம்,'' என்றார்.
மேலும்
-
ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி டெபாசிட் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
-
பொங்கல் விழாவில் பங்கேற்க திருச்சி வருகிறார் அமித் ஷா
-
பக்திப் பரவசத்துடன் பிறந்த 2026
-
வேலைநிறுத்தம் தவிர்க்க அரசு பகீரத முயற்சி; அரசு ஊழியர் சங்கங்களுடன் அமைச்சர் நாளை பேச்சு
-
அணுசக்தி நிலையங்கள் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் தகவல் பரிமாற்றம்
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; மேலும் ஒருவர் மீது தீ வைப்பு