கலிதா ஜியா இறுதிச் சடங்கில் பங்கேற்பு; பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினார் ஜெய்சங்கர்
டாக்கா: வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானை சந்தித்த மத்திய ஜெய்சங்கர் இரங்கல் கடிதத்தை வழங்கினார்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 80, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக நேற்று காலமானார். இவரின் மறைவுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். டாக்காவில் இன்று (டிசம்பர் 31) கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேசம் சென்றுள்ளார். அவர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானை சந்தித்த மத்திய ஜெய்சங்கர் இரங்கல் கடிதத்தை வழங்கினார். இது குறித்து சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
டாக்காவிற்கு வந்தடைந்ததும், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனும், பிஎன்பி கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மானை சந்தித்தேன். பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை அவரிடம் வழங்கினேன். இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தேன். கலிதா ஜியாவின் தொலைநோக்குப் பார்வை நமது கூட்டாண்மையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
31 டிச,2025 - 18:37 Report Abuse
இப்போ இது அவசியமான ஒன்னு? அவன் ஹிந்துவை கொன்னுட்டே இருக்கான் 0
0
Reply
Srinivasan Sankaran - ,இந்தியா
31 டிச,2025 - 16:55 Report Abuse
மத்தியானம் போய் இருப்பார் போல 0
0
செல்வேந்திரன்,அரியலூர் - ,
31 டிச,2025 - 17:32Report Abuse
ஏலேய் இது ஒரு பிரச்சனைப்....
உங்களுக்கு? 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
31 டிச,2025 - 16:08 Report Abuse
மத்திய ஜெய்சங்கர், மத்திய ஜெய்சங்கர் அப்படின்னா என்னா? 0
0
சந்திரன்,இராமநாதபுரம் - ,
31 டிச,2025 - 17:35Report Abuse
சுப்பின்னா என்ன சூப்பின்னா என்ன? 0
0
Barakat Ali - Medan,இந்தியா
31 டிச,2025 - 19:08Report Abuse
ஆமாம் ...... முதல் பத்தியில் அப்படித்தான் இருக்கு ......... 0
0
Reply
SUBBU,MADURAI - ,
31 டிச,2025 - 15:23 Report Abuse
ஹாடி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஃபைசல் கரீம் மசூத், பங்களாதேஷ் ஊடகங்களால் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், உண்மையில் அவன் துபாயில் இருக்கிறான். அங்கிருந்து ஒரு பரபரப்பான காணொளி அறிக்கையில், ஹாடியின் மரணத்திற்கு பங்களாதேஷில் இயங்கும்
ஜமாத் அமைப்பே காரணம் என்று ஃபைசல் குற்றம் சாட்டியுள்ளான். இதனால் வங்கதேச யூனுஸ் பொம்மை அரசின் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது. 0
0
Reply
மேலும்
-
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு
-
ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி
-
ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே கோரிக்கை மனு முடித்து வைப்பு
-
'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய்
-
மாநகராட்சி மைதானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கபடி விளையாட்டு அரங்கு
-
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை
Advertisement
Advertisement