காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை
சூலூர்: காட்டு பன்றிகள் அட்டகாசத்தால், பயிர்கள் சேதமடைந்து நஷ்டம் ஏற்படுவதால், சுல்தான்பேட்டை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செலக்கரச்சல், இடையர் பாளையம், போகம் பட்டி, வடவள்ளி, திம்மநாயக்கன் பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மக்காச்சோளம், கீரை, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் பயிர்களை, காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் வேதனையில் தவிக்கின்றனர்.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
விவசாயத்தால் எங்கள் வாழ்க்கை நடக்கிறது. இந்தாண்டு மழை குறைவாக பெய்ததால், பயிர்களை காப்பாற்ற படாது பாடுபட வேண்டி உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. வனத்துறை புகார் அளித்தும் பலன் இல்லாமல் உள்ளது. வனத்துறையினர் வந்து ஆய்வு செய்ததோடு சரி; காட்டு பன்றிகளை பிடிக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.
கடந்த சில நாட்களாக கும்பலாக வரும் காட்டு பன்றிகள், பல தோட்டங்களில் புகுந்து, அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக காட்டுப்பன்றிகளை பிடிக்க, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், விவசாயிகளை சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி டெபாசிட் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
-
பொங்கல் விழாவில் பங்கேற்க திருச்சி வருகிறார் அமித் ஷா
-
பக்திப் பரவசத்துடன் பிறந்த 2026
-
வேலைநிறுத்தம் தவிர்க்க அரசு பகீரத முயற்சி; அரசு ஊழியர் சங்கங்களுடன் அமைச்சர் நாளை பேச்சு
-
அணுசக்தி நிலையங்கள் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் தகவல் பரிமாற்றம்
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; மேலும் ஒருவர் மீது தீ வைப்பு