அமன் ஷெராவத்துக்கு மவுசு: புரோ மல்யுத்த ஏலத்தில்

புதுடில்லி: புரோ மல்யுத்த ஏலத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத்தை வாங்க போட்டி காணப்படுகிறது.

இந்தியாவில், வரும் ஜன. 15 முதல் பிப். 1 வரை புரோ மல்யுத்த லீக் 5வது சீசன் நடக்கவுள்ளது. ஹரியானா, மும்பை, பஞ்சாப், டில்லி, மகாராஷ்டிரா, உ.பி., என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.
இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம், வரும் ஜன. 3ல் டில்லியில் நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர் அமன் ஷெராவத்தின் 21, அடிப்படை ஏலத்தொகை ரூ. 18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர், பாரிஸ் ஒலிம்பிக் (2024), ஆசிய விளையாட்டில் (2022) வெண்கலம் வென்றிருந்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் (2020ல் தங்கம், 2024ல் வெண்கலம்) வென்ற ஜப்பான் வீராங்கனை யுய் சுகாசியின் அடிப்படை ஏலத்தொகை ரூ. 18 லட்சமாக உள்ளது.


உலக சாம்பியன்ஷிப் (வெள்ளி), ஆசிய விளையாட்டு (வெள்ளி), காமன்வெல்த் விளையாட்டில் (தங்கம்) பதக்கம் வென்ற இந்திய வீரர் தீபக் புனியா, காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் கைப்பற்றிய நவீன் ஆகியோரது அடிப்படை ஏலத்தொகை ரூ. 10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இந்திய வீரர் சுஜீத் கல்கல், ரூ.

Advertisement