'கோமா' நிலையில் டேமியன் மார்டின்
பிரிஸ்பேன்: மூளைக்காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலியாவின் டேமியன் மார்டின் 'கோமா' நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்டின் 54. 'டாப்-ஆர்டர்' பேட்டரான இவர், 1992ல் சர்வதேச கிரிக்கெட்டில் (பிரிஸ்பேன் டெஸ்ட், எதிர்: வெ.இண்டீஸ்) காலடி வைத்தார். 67 டெஸ்ட் (4406 ரன், 13 சதம், சராசரி 46.37, 'ஸ்டிரைக்ரேட்' 51.41, 2 விக்கெட்), 208 ஒருநாள் (5346 ரன், 5 சதம், சராசரி 40.80, 'ஸ்டிரைக்ரேட்' 77.73, 12 விக்கெட்), 4 சர்வதேச 'டி-20'ல் (120) விளையாடினார். உலக கோப்பை (1999, 2003), சாம்பியன்ஸ் டிராபி (2006) வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். இதில் 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை பைனலில் 88 ரன் விளாசினார். கடந்த 2006ல் ஓய்வு பெற்ற இவர், சிறிது காலம் வர்ணனையாளராக பணியாற்றினார்.
சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட டேமியன் மார்டின், மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்பேனில் உள்ள கோல்டு கோஸ்ட் பல்கலை., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 'கோமா' நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
டேமியன் மார்டின் விரைவில் பூரண குணமடைய முன்னாள், இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள், கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் வாழ்த்தினர்.
மேலும்
-
'சேவை செய்யும் எண்ணத்தை சிறுவயது முதல் வளர்க்கணும்'
-
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு
-
ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி
-
ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே கோரிக்கை மனு முடித்து வைப்பு
-
'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய்
-
மாநகராட்சி மைதானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கபடி விளையாட்டு அரங்கு