உலக விளையாட்டு செய்திகள்

ஆர்சனல் அசத்தல்
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஆர்சனல், ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின. இதில் ஆர்சனல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 19 போட்டியில், 14 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி என, 45 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.


59 வயதில் கால்பந்து

டோக்கியோ: ஜப்பான் கால்பந்து வீரர் காசூயோஷி மியூரா 58. அடுத்த மாதம் 59வது பிறந்த நாள் கொண்டாட உள்ள இவர், ஜப்பானில் நடக்கவுள்ள 'ஜே-லீக்' தொடருக்கான புகுஷிமா யுனைடெட் அணியில் ஒப்பந்தமானார். ஜப்பானுக்காக 89 போட்டியில், 55 கோல் அடித்த இவர், 1986ல் முதன்முறையாக சாண்டோஸ் (பிரேசில்) கிளப் அணிக்காக களமிறங்கினார். தனது 50வது வயதில் (2017), தொழில்முறை போட்டியில் விளையாடிய மூத்த கால்பந்து வீரரானார்.


எக்ஸ்டிராஸ்

* மும்பை மாரத்தான் ஓட்டம் 21வது சீசனுக்கான (ஜன. 18) விளம்பர துாதராக, கனடா தடகள வீரர் ஆன்ட்ரி டி கிராஸ் 31, நியமனம். இவர், ஒலிம்பிக்கில் 2 தங்கம் (2020ல் 200 மீ., ஓட்டம், 2024ல் 4x100 மீ., தொடர் ஓட்டம்) வென்றிருந்தார்.

* சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் 'ரெப்ரி' குழுவில் இந்தியாவின் ரச்சனா காமனி (குஜராத்), அஷ்வின் குமார் (புதுச்சேரி), ஆதித்யா (டில்லி) சேர்க்கப்பட்டனர். 'அசிஸ்டென்ட் ரெப்ரி' குழுவில் முரளிதரன் பாண்டுரங்கன் (புதுச்சேரி), பீட்டர் கிறிஸ்டோபர் (மகாராஷ்டிரா) இணைந்தனர்.

* பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான டில்லி அணியின் பயிற்சி முகாமில், தென் ஆப்ரிக்காவின் மரிசானே காப், லிசெல்லி லீ, இந்தியாவின் மின்னு மணி, தனியா பாட்யா, நிக்கி பிரசாத், மம்தா, நந்தினி சர்மா உள்ளிட்டோர் இணைந்தனர்.

Advertisement