50,000 டன் ஆர்கானிக் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
புதுடில்லி: ஒரு நிதியாண்டில் 50,000 டன் வரை, ஆர்கானிக் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஒரு நிதியாண்டுக்கு 50,000 டன் ஆர்கானிக் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னர், கட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த ஆர்கானிக் சர்க்கரை, தற்போது ஏற்றுமதி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த ஏற்றுமதியானது, 2023ம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையில் மேற்கொள்ளப்படும். மேலும், ஏற்றுமதிக்கான விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் எனும் 'அபெடா' நிர்ணயம் செய்யும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் முடிவுக்கு, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆர்கானிக் சர்க்கரையை கட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் இருந்து நீக்கி, அதற்கு ஒரு குறிப்பிட்ட ஏற்றுமதி அளவை நிர்ணயித்ததன் வாயிலாக, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கும், ஆலை உரிமையாளர்களுக்கும் ஒரு புதிய லாபகரமான வாய்ப்பை அரசு உருவாக்கி உள்ளதாக அச்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
@block_B@ ஆர்கானிக் சர்க்கரை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இன்றி, இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்படும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை ஆர்கானிக் சர்க்கரை என அழைக்கப்படுகிறது. வழக்கமான சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட, லேசான மஞ்சள் அல்லது பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில், ஆர்கானிக் சர்க்கரை இருக்கும். இந்தியாவில் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தியில், ஆர்கானிக் சர்க்கரை குறைவான பங்கு மட்டுமே வகிக்கிறது. எனினும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் குறிப்பிட்ட பகுதிகளில், ஆர்கானிக் உணவு தயாரிப்புகளுக்கு தேவை நிலையாக அதிகரித்து வருகிறது.block_B
மேலும்
-
'சேவை செய்யும் எண்ணத்தை சிறுவயது முதல் வளர்க்கணும்'
-
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு
-
ரயில்வே சுரங்கபாதை வாகனங்களுக்கு அனுமதி
-
ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே கோரிக்கை மனு முடித்து வைப்பு
-
'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய்
-
மாநகராட்சி மைதானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கபடி விளையாட்டு அரங்கு