கஞ்சா விற்பனையை தடுக்காத போலீசார் மீதும் நடவடிக்கை
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதும், மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் சென்று சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதும் கவலை அளிக்கிறது. திருத்தணி ரயில் நிலையத்தில், வடமாநில இளைஞரை, 17 வயது சிறுவர்கள் அரிவாளால் வெட்டி, 'ரீல்ஸ்' எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பரில், விருத்தாசலத்தில், மூன்று இளைஞர்கள் சேர்ந்து, ஒருவரை இரும்புக்கம்பியால் தாக்கி, கத்தியை கழுத்தில் வைத்து, ரத்தம் சொட்டச்சொட்ட கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோவை, 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்டனர்.
இதே போன்ற கொடூரமான சம்பவங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இளைஞர்கள் கஞ்சா போதையில், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சுற்றுகின்றனர்.
இது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமதாஸ்,
நிறுவனர், பா.ம.க.,
மேலும்
-
முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்
-
ஏரியில் அளவை மீறி மண் எடுத்த 9 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
-
ரூ.33 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
-
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஓராண்டில் ரூ.110 கோடிக்கு விற்பனை
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது
-
கூட்டத்துடன் சேர முடியாமல் தவித்ததால் முதுமலைக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை