ரூ.33 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
தர்மபுரி: தர்மபுரி பட்டுக்கூடு ஏல அங்காடி ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்துார்
உட்பட, 13 மாவட்டங்களை சேர்ந்த, பட்டுக்கூடு விவசா-யிகள், வெண்பட்டு கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு பட்டுக்கூடுக-ளுக்கு நல்ல விலை கிடைப்பதால் வாரத்தில், 6 நாள் நடக்கும் ஏலத்தில், எராளமான விவசாயி கள் கலந்து கொள்கின்றனர். கடந்த, 2025ல், ஓராண்டில் மட்டும் நடந்த ஏலத்தில், 7,884 விவ-சாயிகள் ஏலத்திற்கு வந்திருந்தனர்.
இதில், 20,155 குவியல்களாக, 5 லட்சத்து, 62,493 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்தி-ருந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு, 340 முதல், 889 ரூபாய் வரை ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 33.84 கோடி ரூபாய். இந்த ஏலத்தால் அர-சுக்கு, 50.76 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்-ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது