கூட்டத்துடன் சேர முடியாமல் தவித்ததால் முதுமலைக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை
தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே, கூட்டத்துடன் சேராமல் தவித்த குட்டி யானை, முதுமலை யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த மிலிதிக்கி அருகே உளிபண்டா வனப்பகுதியில், கடந்த, 4ம் தேதி தண்ணீர் குடிக்க வந்த யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த, 6 மாத ஆண் குட்டி யானை, தண்ணீர் குட்டைக்குள் தவறி விழுந்தது. அதை, ஜவளகிரி வனத்துறை-யினர் மீட்டனர். தொடர்ந்து அதை, தாய் யானை அல்லது மற்ற யானைகள் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், மனிதர்கள் வாசனை குட்டி யானை மீது பரவியதால், யானைகள் கூட்டம், அதை சேர்த்துக் கொள்ளவில்லை. அஞ்செட்டியில் குட்டி யானையை வனத்துறையினர்
பராமரித்து வந்தனர்.
ஆனால், யானை பால் குடிக்காமல், உணவு உட்-கொள்ளாமல் சோர்ந்து உடல் மிகவும் மெலிந்-தது.இதற்கு மேல், குட்டி யானையை பராமரிக்க முடி-யாது என்பதாலும், அதன் உயிருக்கு ஆபத்து ஏற்-படும் சூழல் நிலவியதாலும், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர்
பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் படி, அஞ்செட்டி வனச்சரகர் கோவிந்தன், வன கால்நடை மருத்துவர் ஜெயச்-சந்திரன் மற்றும் வனத்துறையினர், 6 மாத குட்டி யானையை, வேன் மூலமாக, முதுமலை தெப்-பக்காட்டில் உள்ள யானைகள் முகாமில் நேற்று சேர்த்தனர்.-
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!