தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஓராண்டில் ரூ.110 கோடிக்கு விற்பனை
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வேளாண் வணிக துணை இயக்-குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயனடையும் வகையில், பாலக்கோடு, காரிமங்கலம், ஏ.ஜெட்டிஹள்ளி, பென்னாகரம், தர்மபுரி மற்றும் அரூரில் என, 6 உழவர் சந்தைகள் செயல்படு கின்றன. மேலும், தர்மபுரி டவுனிலுள்ள மாலை நேர உழவர் சந்தை நுகர்வோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்-ளது.
இதில் கடந்த, 2024ல், 11,000 டன் அளவி-லான காய்கறிகள், 98.15 கோடி ரூபாய்க்கு விற்ப-னையானது. கடந்தாண்டு, 2025ல் தர்மபுரி உழவர் சந்தையில், 12,489 டன் காய்கறிகள், ஏ.ஜெட்டிஹள்ளியில், 6,580 டன், அரூரில், 3,698, பென்னாகரத்தில், 2,784, பாலக்கோட்டில், 1,407 டன் மற்றும் காரி-மங்கலத்தில், 519 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் என, 92,715 விவசாயிகள் கொண்டு வந்த மொத்தம், 30,585 டன் அளவிலான காய்கறிகள், பழங்கள், 110 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இதை, 64.13 லட்சம் நுகர்வோர் வாங்கிச் சென்-றனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது