பேச்சு, பேட்டி, அறிக்கை
மா.கம்யூ., கட்சியின், மதுரை எம்.பி., வெங்கடேசன் பேட்டி: மத்திய அரசுக்கு, தமிழக அரசு அளிக்கும் ஒரு ரூபாய் வரிப் பணத்தில், நமக்கு திருப்பி தருவது, 29 பைசாதான். ஆனால், பா.ஜ., ஆளும் உத்தர பிரதேச அரசுக்கு தருவது, 2 ரூபாய் 70 பைசா. இதை ஒப்பிட்டு பார்த்தாலே, எவ்வளவு பெரிய அநீதியை தமிழகத்திற்கு மத்திய அரசு செய்கிறது என்பது தெரியும். இதை எல்லாம் தாண்டியும், தமிழக அரசு பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு தரும், 29 பைசாவிலும் எத்தனை பைசா, 'கமிஷன், கட்டிங்' விவகாரங்களுக்கு போகுது என்ற புள்ளி விபரம் இவருக்கு தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகம் கட்சி யின், கொங்கு மண்டல அமைப்பு செயலர் செங்கோட்டையன் பேட்டி: காங்., கட்சியுடன், தொடர்ந்து கருத்துகளை பரிமாறி வருகிறோம். ஒவ்வொரு தலைவரும், ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றனர். எங்களை பொறுத்த வரை, விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்வோர் மட்டும் தான் கூட்டணியில் இணைய முடியும். பொறுத்திருங்கள்... ஜனவரி முதல் வாரத்தில் அனைத்தும் தெரியும். எல்லாரும் வாழ வேண்டும்; எல்லாருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
'த.வெ.க., கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு' என்பதைத் தான், 'எல்லாரும் வாழணும்'னு நாசுக்கா சுட்டிக்காட்டுறாரோ? விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: பா.ஜ., ஆட்சியை பிடிக்க, அ.தி.மு.க., போன்ற கட்சிகள் துணை நிற்கின்றன. சனாதன கொள்கைவாதிகள் வேரூன்ற, அ.தி.மு.க.,வினர் தெரிந்தே இடம் தருகின்றனர். விழிப்புணர்வுடன் செயல்பட்டு, பா.ஜ., - அ.தி.மு.க., அணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நம் கொள்கையாக இருக்க வேண்டும்.
எதுக்கு சுத்திவளைச்சு பேசுறாரு... 'தி.மு.க.,வின் கொள்கை தான், வி.சி.,க்களின் கொள்கையும்'னு ஒரே வரியில் முடிச்சிட்டு போக வேண்டியது தானே!
காங்., தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லாமல், தி.மு.க.,வுடன் நல்ல உறவுடன் இருக்கிறோம். எங்கள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகள் குளிர்காய முயற்சிக்கின்றன. நல்ல புரிதல் இருப்பதால், எதிர்க்கட்சிகள் நினைப்பது போல், கூட்டணியை சிதைக்க முடியாது. தொகுதி பங்கீட்டிற்காகவோ அல்லது ஆட்சி அதிகாரத்துக்காகவோ அமைந்த கூட்டணி அல்ல இது. நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் பற்றுள்ள கூட்டணி.
இதன் வாயிலாக, 'தொகுதிகளை குறைத்து கொடுத்தாலும், ஆட்சியில் பங்கு தர மறுத்தாலும், தி.மு.க., அணியில் தான் நீடிப்போம்'னு சொல்லாம சொல்லிட்டாரே!
மேலும்
-
முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்
-
ஏரியில் அளவை மீறி மண் எடுத்த 9 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
-
ரூ.33 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
-
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஓராண்டில் ரூ.110 கோடிக்கு விற்பனை
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது
-
கூட்டத்துடன் சேர முடியாமல் தவித்ததால் முதுமலைக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை