நாடு போற்றும் நல்லாட்சிக்கு இதுதான் அழகா?

தமிழக தோட்டக்கலை துறையை நீர்த்து போக செய்வதோடு, சிறு குறு விவசாயிகளுக்கு சரியான நிபுணத்துவ சேவையும் கிடைக்க முடியாத வகையில், உழவர் அலுவலர் தொடர்பு 2. O திட்டத்தை கொண்டு வர, தி.மு.க., அரசு முயற்சிப்பது கண்டனத்திற்கு உரியது.

பல்வேறு குளறுபடிகள் வாயிலாக தோட்டக்கலை துறையில், 141 கோடி ரூபாய் ஊழல் செய்த தி.மு.க., அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று விட்டது. தோட்டக்கலை துறையின் தனித்துவத்தை அழித்து, வேளாண் துறையின் ஓர் அங்கமாக மாற்ற திட்டமிட்டு, ஒட்டுமொத்தமாக தோட்டக்கலை துறையை உருக்குலைக்க முடிவு செய்துள்ளது.

மேலும், தோட்டக்கலை அலுவலர்களின் வாழ்வாதாரத்தை பறித்து, போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது. தோட்டக்கலை துறை அலுவலர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என, அனுதினமும் அரசு ஊழியர்களை போராடும் நிலைக்கு தள்ளி, அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை சீரழிப்பது தான், நாடு போற்றும் நல்லாட்சியின் அழகா?

- நயினார் நாகேந்திரன்,

தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement