கள்ளக்குறிச்சியில் ஜன.,5ல் அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டம்
சென்னை: கள்ளக்குறிச்சியில், வரும் 5ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட மகளிரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தின் தொடர்ச்சியாக, வரும் 4ம் தேதி, சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பங்கேற்று பேச உள்ளார். 5ம் தேதி, கள்ளக்குறிச்சியில் நடக்கும், மாவட்ட மகளிரணி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 26ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, 'தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் 5 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன' என்றார்.
அதற்கு பதிலளித்த பழனிசாமி, 'அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து, நான் பதில் அளிக்க தயார். தி.மு.க., ஆட்சி குறித்து, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முதல்வர் தயாரா. என்னுடன் மேடையேறி விவாதிக்க தயாரா' என சவால் விட்டார்.
கள்ளக்குறிச்சி அரசு விழா, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே வார்த்தை போராக மாறியதால், பல்லடம் தி.மு.க., மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் பேசியவற்றுக்கு பதிலடி கொடுத்து, கள்ளக்குறிச்சியில் நடக்கும் அ.தி.மு.க., மகளிரணி பொதுக்கூட்டத்தில், பழனிசாமி பேசுவார் என அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
மேலும்
-
முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்
-
ஏரியில் அளவை மீறி மண் எடுத்த 9 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
-
ரூ.33 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
-
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஓராண்டில் ரூ.110 கோடிக்கு விற்பனை
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது
-
கூட்டத்துடன் சேர முடியாமல் தவித்ததால் முதுமலைக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை