எந்த நடிகர் வந்தாலும் 'இண்டி' கூட்டணி ஜெயிக்கும்

தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பதிவில், 66.44 லட்சம் பேர், ஏற்கனவே குறிப்பிட்டிருக்கும் முகவரியில் இல்லை. அதாவது இடம் பெயர்ந்தோர் என தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ளது.

அப்படியென்றால், அவர்கள் மாயமாகி விட்டனரா; அல்லது, தெருவில் வாழ்கிறார்களா. இதை தேர்தல் கமிஷன் தான் முறையாக சொல்ல வேண்டும்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சித் துவங்கி, தமிழக அரசியல் களத்துக்கு வந்துள்ளார். அவரது வருகையால், தி.மு.க., - காங்., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா என தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரை 'இண்டி' கூட்டணிதான் ஜெயிக்கும்.

இக்கூட்டணி மற்ற கூட்டணிகளைக் காட்டிலும் வலுவாக உள்ளது. இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும், ஒற்றுமையோடு ஒன்றாக இணைந்து செயல்படுகின்றனர்.

அதனால், விஜய் அல்ல வேறு எந்த நடிகர் வந்தாலும், இக்கூட்டணியை எதிர்த்து நிற்க முடியாது.

- சிதம்பரம்,

மூத்த தலைவர், காங்.,

Advertisement