200க்கும் மேற்பட்ட பனைமரம் சட்ட விரோதமாக அகற்றம்
துாத்துக்குடி: திருச்செந்துார் அருகே, சட்ட விரோதமாக பனை மரங்கள் வெட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும்; பனைமரங்களை வெட்டக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே கல்லாமொழி பகுதியில், எந்தவித அனுமதியுமின்றி, 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி அகற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஜெகன் அகிலராஜ் என்பவர், போலீசாருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கல்லாமொழி கிராமத்தில், கலெக்டரின் அனுமதியின்றி, 200க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அந்த இடத்தை வீட்டு மனைகளாக்கி, விற்பனை செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிகிறது.
சட்ட விரோதமாக பனை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியவர்கள் மீதும், அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மேலும்
-
முறிந்து விழுந்த மரம் நெடுஞ்சாலைத்துறை அகற்றம்
-
ஏரியில் அளவை மீறி மண் எடுத்த 9 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
-
ரூ.33 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
-
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஓராண்டில் ரூ.110 கோடிக்கு விற்பனை
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது
-
கூட்டத்துடன் சேர முடியாமல் தவித்ததால் முதுமலைக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை