உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்

4


வாஷிங்டன்: உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுவதாக ஐஎம்எப் (IMF) எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் 3ம் காலாண்டு வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சர்வதேச நாணயம் நிதியத்தின் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக் கூறியதாவது;

இந்தியாவின் 2025-26 நிதியாண்டிற்கான வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் முன்பு கணித்திருந்தது. இது முழுக்க முழுக்க வலிமையான உள்நாட்டு நுகர்வை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவின் 3ம் காலாண்டு வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால், வரும் நாட்களில் இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை ஐஎம்எப் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த வாரம் ஐஎம்எப் வெளியிட இருக்கும் உலகப் பொருளாதாரம் தொடர்பான அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பு அதிகரிக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இருந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி மிகவும் வலிமையாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement