உத்தவ் தாக்கரேவின் 30 ஆண்டு ஆதிக்கம் தகர்ந்தது: மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது பாஜ கூட்டணி

57

மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில், பாஜ தலைமையிலான கூட்டணி, பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், 30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் இருந்த தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. பாஜ கூட்டணி 116 இடங்களிலும், எதிர்க்கட்சி கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


மஹாராஷ்டிராவின் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை 7:30 மணிக்கு துவங்கி மாலை 5:30 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. இன்று (ஜனவரி 16) காலை 10 மணி முதல் ஓட்டுக்களை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

Latest Tamil News


நாட்டின் பெரும் பணக்கார மாநகராட்சி என்று கருதப்படும் மும்பை மாநகராட்சியில் பதிவான ஓட்டுகளை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் எண்ணினர். இதையொட்டி, மும்பை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Latest Tamil News

வெற்றி விவரம்



பாஜ தலைமையிலான மஹாயுதி மும்பையை கைப்பற்ற உள்ளது. மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜ தலைமையிலான கூட்டணி, பெரும்பான்மைக்க தேவையான 114 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. அக்கூட்டணி 116 இடங்களில் முன்னிலையில் உள்ளது.( பாஜ.,-88, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா -29 இடங்களில் முன்னிலையில்உள்ளது) இதன் மூலம் மாநகராட்சியில், 30 ஆண்டுகளாக இருந்த தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.


அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 3, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

மற்றவை 9 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

Latest Tamil News

இந்த தேர்தலுக்காக கூட்டணி அமைத்த உத்தவ் -ராஜ் தாக்கரே சகோதரர்களின் அணி 73 இடத்திலும், காங்கிரஸ் 24 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.


அதேபோல், மாநிலத்தின் பெரும்பாலான மாநகராட்சிகளிலும் ஆளும் பாஜ கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.


லத்தூர் மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மொத்தம் 70 இடங்களில் 43 வார்டுகளை காங்கிரஸ் கைபற்றியது. 22 இடங்களை பிடித்து பாஜ இரண்டாவது இடத்தில்உள்ளது.

முதன்மையான கட்சி



மத்திய அமைச்சர் ராமதாஸ் அதாவலே கூறியதாவது :
உத்தவ் தாக்கரே, பாஜ மற்றும் இந்திய குடியரசு கட்சி ஆதரவுடன் நீண்ட காலமாக மும்பை மாநகரில் கோலோச்சி வந்தார்.
இந்த தேர்தலுடன் அது முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது பாஜ தான் நாட்டின் முதன்மையான கட்சி.
ராஜ் தாக்கரே உடன் இணைந்ததால் உத்தவ் தாக்கரேவிற்கு மும்பையின் மராத்தி பேசும் மக்கள் வாழக்கூடிய ஒரு சில பகுதிகளில் மட்டும் முன்னிலை கிடைத்துள்ளது. எனினும் பெரும்பாலான வார்டுகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மராத்தி பேசக்கூடிய மகாயுதி கூட்டணியை சேர்ந்த ஒருவர்தான் மேயராக தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு ராமதாஸ் அதாவலே தெரிவித்தார்.


தேர்தல் நடத்தப்பட்ட 29 நகர்ப்புற உள்ளாட்சிகளில், பாஜ தலைமையிலான கூட்டணிக்கு 23 மாநகராட்சிகளில் தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது.

Advertisement