பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

ஸ்ரீநகர

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து அரசு ஊழியர்களை துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பணி நீக்கம் செய்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த ஒமர் அப்துல்லா உள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள அரசு ஊழியர்களை கண்டறிந்து, அவர்களை பணி நீக்கம் செய்யும் நடைமுறை கடந்த 2020 முதல் இங்கு அமலில் உள்ளது.

இதன்படி பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 85 அரசு ஊழியர்களை துணை நிலை கவர்னர் இதுவரை பணி நீக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் மேலும் ஐந்து அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா நேற்று உத்தரவிட்டார்.

இதில் ஆசிரியர் முகமது இஷ்பக், உதவி லைன் மேன் பசீர் அஹமது மிர் ஆகியோருக்கு லஷ்கர் - இ - தொய்பா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதேபோல், ஆய்வக உதவியாளர் தாரிக் அஹமது ரா, வனத்துறை ஊழியர் பருக் அஹமது பாட், சுகாதாரத்துறை டிரைவர் முகமது யூசுப் ஆகியோருக்கு ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement