தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது; ஒரு சவரன் ரூ.99,520!
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 99 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளிக்கு, அந்நாடு சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நம் நாட்டில் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டின.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் (டிசம்பர் 30) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 420 ரூபாய் குறைந்து, 12,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 3,360 ரூபாய் சரிவடைந்து, 1,00,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 23 ரூபாய் குறைந்து, 258 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 23,000 ரூபாய் சரிவடைந்தது, 2.58 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (டிசம்பர் 31) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 12,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, ஒரு லட்சத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் குறைந்து, 12,480 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் சரிவடைந்து, 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 99 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, தங்கம் சவரன் விலை, மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, 256 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
போன வாரம் தான்நாலு கிலோ வாங்கிப் போட்டேன். இந்த வாரம் இன்னும் ரெண்டு கிலோ வாங்கலாம்னு இருக்கேன்.மேலும்
-
அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு
-
மத்திய அரசு சாலை கட்டமைப்பால் சுற்றுலா பயணியரை கவரும் கேரளா
-
நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை விரைவில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
-
பல மடங்கு உயர்கிறது கலால் வரி: பிப்ரவரி 1 முதல் சிகரெட் விலை அதிகரிக்கும்!
-
கடனை வைத்து மதிப்பீடு செய்வது பிழை; கூட்டணிக்கு முட்டுக்கொடுக்கிறார் ப.சிதம்பரம்
-
சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர வெடி விபத்து: பலர் பலி