தண்ணீரை பகிர்ந்து கொள்ளுமாறு எங்களிடம் நீங்கள் கேட்க முடியாது: பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் திட்டவட்ட பதில்

11

சென்னை: தண்ணீரை பகிர்ந்து கொள்ளுமாறு எங்களிடம் நீங்கள் கோர முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக பதிலளித்துள்ளார்.


@1brசென்னையில் நடந்த சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளை தொடக்க விழாவில் ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்தில் இருந்து தனது மக்களைப் பாதுகாக்க இந்தியா அனைத்தையும் செய்யும். நட்பு நாடு எது, எதிரி நாடு எது என்பதை பிரித்துப் பார்க்க வெளியுறவுத்துறைக்குத் தெரியும். பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.


பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் மோசமான அண்டை நாட்டிற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது எங்கள் முடிவு. நாங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கும்.


எங்கள் தண்ணீரை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு நீங்கள் எங்களிடம் கோர முடியாது, மேலும் எங்கள் நாட்டில் பயங்கரவாதத்தைப் பரப்பவும் முடியாது. ஒரு நாடு வேண்டுமென்றே, விடாப்பிடியாக மற்றும் வருத்தமின்றி பயங்கரவாதத்தைத் தொடர முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளாக பயங்கரவாதம் தொடர்ந்து வருவதால், நீங்கள் நல்ல அண்டை நாடு கிடையாது. நீங்கள் அண்டை நாட்டின் நன்மைகளை பெற முடியாது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Advertisement