சீர்மிகு தமிழகமாக மாற்றி பிரதமர் மோடியின் சபதத்தை நிறைவேற்றுவார் அமித்ஷா

3

சென்னை: தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என் எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரை நிறைவு விழாவில், தமிழகத்தில் ஊழல் திமுகவை விரட்டியடித்து வளர்ச்சி பாதையில் தமிழகத்தை உருவாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் சபதத்தை நிறைவேற்ற புதுக்கோட்டை வர இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்.

2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகம் வலிமை பெறும்! வளர்ச்சி பெறும் !! தமிழகத்திலும் பா.ஜ.,வின் இரட்டை எஞ்சின் ஆட்சி மலரும்!!! தமிழகத்திற்கு முன்னுரிமை அளித்து பிரதமர் மோடி வழங்கியுள்ள, வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், தமிழ் மொழியின் பெருமையை பேணிக்காப்பதிலும், தமிழர் நாகரிகத்தை உலகமே வழிகாட்டியாக கொண்டு செல்ல வேண்டும் என்கிற முழக்கத்துடன், திருவள்ளூர் வழியில், திருக்குறள் நெறியில் ஆட்சி நடத்தி வரும் தமிழ் மகன் மோடியின் மக்கள் நல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும்.

மக்கள் விரோத தீய சக்தி திமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று 2026 சட்டசபை தேர்தலுக்காக தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்க வரும் அமித்ஷாவின் புதுக்கோட்டை வருகை புத்துணர்ச்சியையும், புதிய நம்பிக்கையையும், பெரும் எழுச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விலைவாசி உயர்வு, கொலை கொள்ளை, போதை கலாசாரம், ஊழலற்ற கொடுங்கோல் ஔரங்கசீப் ஆட்சி அரசியலுக்கு முடிவு கட்டும் வகையில் அரசியல் சாணக்கியர் அமித்ஷா மக்கள் விரோத தீய சக்தி திமுகவின் ஆட்சிக்கு முழுமையான முடிவுரை எழுத உள்ளார்.

தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நம்பிக்கை கோட்டையை உருவாக்கி இருக்கும் அரசியல் சாணக்கியர் அமித்ஷாவின் புதுக்கோட்டை வருகை, மக்கள் விரோத திமுக கட்சியையும், தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பிரிவினைவாத மதவாத அரசியல் செய்யும் திமுக ஆட்சியையும் ஆழிப் பேரலையாய் அழித்தொழிக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement